Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் 93,000 பேர் ஏமாற்றம்; அரசுக்கு எதிராக ஜூலையில் போராட்டம்

ADDED : மே 31, 2025 06:33 AM


Google News
Latest Tamil News
சென்னை: புதிய ஊதிய ஒப்பந்த பேச்சில், போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க, அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும்; நிலுவையில் உள்ள அக விலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு வசதி வழங்கப்பட வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, ஓய்வூதியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சென்னை குரோம்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்த போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சில், இதற்கு தீர்வு கிடைக்கும் என்று ஓய்வூதியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதில் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படாததால், அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் தலைவர் கதிரேசன் கூறியதாவது: எங்களின் ஒன்பது கோரிக்கைகளை, அமைச்சரிடம் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

இது, 93,000 ஓய்வூதியர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால், ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமல் வெளிநடப்பு செய்தோம். எனவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜூலையில் போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us