Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு

ADDED : ஜூன் 06, 2025 01:10 PM


Google News
Latest Tamil News
சென்னை: ''ஜூன் 11ல் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜூன் 10ம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 11ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஜூன் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஜூன் 10,11,12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us