Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்

ADDED : ஜூன் 06, 2025 12:34 PM


Google News
Latest Tamil News
சென்னை: திருத்தணி கூலித் தொழிலாளி ராஜேந்திரனின் சடலத்தை பீஹாருக்கு மாற்றி அனுப்பிய விவகாரத்தில் டாக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பூஜ்ஜிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (69). இவர் வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ராஜேந்திரனின் குடும்பத்தினர் உடலில் மாறிவிட்டது என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையில், முதியவர் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது விபத்தில் உயிரிழந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் சடலம் என தெரிய வந்தது. மேலும், அந்த இளைஞரின் சடலத்திற்குப் பதில் ராஜேந்திரனின் சடலம் பீஹாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, உடனடியாக உடலுடன் திருத்தணி திரும்ப ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு போலீசார் உத்தரவிட்டனர். இந்நிலையில், அலட்சியமாக செயல்பட்ட டாக்டர் கிருஷ்ணாவை திருவண்ணாமலைக்கு பணியிட மாற்றம் செய்து, மருத்துவ கல்வி இயக்குநர் சங்குமணி உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us