9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதாவுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து
9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதாவுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து
9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய சுனிதாவுக்கு இ.பி.எஸ்., வாழ்த்து
ADDED : மார் 19, 2025 07:50 AM

சென்னை: 9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது.
மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். பத்திரமாக, திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து இ.பி.,எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கை: 9 மாதங்கள் விண்வெளியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள்.
தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக சுனிதா வில்லியம்ஸ் திகழ்கிறார். திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து திரும்பியது விடாமுயற்சிக்கு ஒரு சான்று. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.
வீட்டிற்கு வரவேற்கிறோம். க்ரூவ் 9 திட்டத்தின் 4 பேர் கொண்ட குழுவின் சாதனை வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.