போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கட்; அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
ADDED : மார் 19, 2025 08:44 AM

சென்னை; பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் இன்று (மார்ச்19) போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந் நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளது. மேலும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் விவரங்களை சேகரிக்கவும், அவற்றை மனித வள மேலாண்மை துறைக்கு அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.