ADDED : ஜன 03, 2024 01:20 AM
சென்னை:நடப்பு நிதியாண்டில் 50000 விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 2023 ஜூலையில் துவக்கி வைத்தார்.
'சீனியாரிட்டி' அடிப்பையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் இதுவரை 50 சதவீதம் கூட வழங்கப்படவில்லை. வெள்ளப்பெருக்கு அதீத கன மழையால் பல மாவட்டங்களில் மின் வினியோக பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. வரும் மார்ச்சிற்குள் விவசாய மின் இணைப்புக்களை முடிக்குமாறு பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.