முருகன் பெயரில் போடும் நாடகம் எடுபடாது
முருகன் பெயரில் போடும் நாடகம் எடுபடாது
முருகன் பெயரில் போடும் நாடகம் எடுபடாது
ADDED : ஜூன் 16, 2025 02:11 AM

தமிழ் கடவுள் முருகன், ஒரு சிலருக்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும், நமக்கு அவர் சம்பந்தமே இல்லாதவர் போலவும் பேசி, ஒரு கூட்டம் தமிழகத்தில் அலைந்து கொண்டிருக்கிறது.
யார் யார் பெயரையெல்லாமோ சொல்லி பார்த்த அந்தக் கூட்டம், எந்த பெயரும் எடுபடாததால், தற்போது முருகக் கடவுள் பெயரைச் சொல்லி, மாநாடு நடத்துகிறது. அதன் வாயிலாக, ஏதாவது ஓட்டுகள் பெற முடியுமா என்ற ஏக்கத்தில் எதை எதையோ சொல்கிறது; செய்கிறது.
அது குறித்து மக்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அதனால், முருகன் பெயரில் போடும் நாடகமெல்லாம் தமிழகத்தில் எடுபடாது.
ரகுபதி,
தமிழக அமைச்சர்