பயிர்களுக்கு இழப்பீடு தர தினகரன் கோரிக்கை
பயிர்களுக்கு இழப்பீடு தர தினகரன் கோரிக்கை
பயிர்களுக்கு இழப்பீடு தர தினகரன் கோரிக்கை
ADDED : டிச 01, 2025 12:34 AM

சென்னை: அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
'டிட்வா' புயல் காரணமாக, பல லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் , மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. வட கிழக்கு பருவமழை துவக்கத்தில் பெய்த கனமழையால், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, இன்று வரை இழப்பீடு வழங்கவில்லை.
தற்போது, 'டிட்வா' புயலால், நெற்பயிர்கள் சேதமடைந்திருப்பது, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
எனவே, நெற்பயிர்களை கணக்கீடு செய்து, அதற்கான இழப்பீடை, உடனடியாக வழங்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு, அழுத்தம் தர வேண்டும். பயிர் காப்பீடு செய்ய, மேலும் 15 நாள் அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


