ஒரே இடத்தில் 3 ஆண்டு பணி இடம் மாற்ற டி.ஜி.பி., உத்தரவு
ஒரே இடத்தில் 3 ஆண்டு பணி இடம் மாற்ற டி.ஜி.பி., உத்தரவு
ஒரே இடத்தில் 3 ஆண்டு பணி இடம் மாற்ற டி.ஜி.பி., உத்தரவு
ADDED : ஜன 03, 2024 11:09 PM
சென்னை:'லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதால், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளை இட மாற்றம் செய்ய வேண்டும்' என, இந்திய தேர்தல் கமிஷன் முறைப்படி கடிதம் எழுதி உள்ளது.
அதன் அடிப்படையில், ஜூன், 30க்குள், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர்களை இட மாற்றம் செய்ய வேண்டும்.
இடமாற்றம் செய்யப்பட உள்ளவர்கள் பட்டியலை தயாரித்து, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். இந்த இடமாற்றம், கூடுதல் டி.ஜி.பி.,க்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையுள்ள அனைவருக்கும் பொருந்தும்.
பணியிட மாற்ற பட்டியலுடன், ஏற்கனவே நடந்த தேர்தல்களின்போது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டவர்கள், தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டவர்கள், குற்ற வழக்கு ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பது குறித்த தகவல்களையும், தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.