Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட் செயல்பாடுகளில் மாற்றம் தேவை: ஓய்வு பெறும் நீதிபதி வலியுறுத்தல்

UPDATED : மே 23, 2025 09:57 PMADDED : மே 23, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: '' சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் என்பது தலைமை நீதிபதியை மையப்படுத்தியதாக உள்ளது. இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்,'' என ஓய்வு பெறும் நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றும் அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா பணி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் சங்கம் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது: கமிட்டிகள் மூலம் ஐகோர்ட்டுகள் செயல்படுகின்றன. ஆனால், சுப்ரீம் கோர்ட் என்பது, தலைமை நீதிபதியை மையப்படுத்தி செயல்படுகிறது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும். தற்போதைய தலைமை நீதிபதி தலைமையில் இது நடக்கும் என நம்புகிறேன்.

முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வெளிப்படைத்தன்மை நோக்கிய பாதையில் நம்மை முன்னெடுத்துச் சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் நம்பிக்கையை பெற்ற பிறகே அவர் முடிவு எடுத்தார். தற்போதைய நீதிபதி கவாய் ரத்தத்தில் ஜனநாயக மாண்பு ஓடுகிறது.

நாம், விசாரணை நீதிமன்றம் மற்றும் சாமானிய மனிதர்களை பற்றி சிந்திக்க வேண்டும். மாவட்ட நீதிமன்றங்களிலும், விசாரணை நீதிமன்றங்களிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.விசாரணை நீதிமன்றங்களை துணை நீதிமன்றங்கள் என அழைக்கக்கூடாது. இது அரசியலமைப்பு மாண்புக்கு எதிரானது. ஒருவரை 20 ஆண்டுகளுக்கு பிறகு தண்டிப்பது என்பது கடினமான பணியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us