உயர் கல்வியில் சிறந்த தமிழகம் முதல்வர் பெருமிதம்
உயர் கல்வியில் சிறந்த தமிழகம் முதல்வர் பெருமிதம்
உயர் கல்வியில் சிறந்த தமிழகம் முதல்வர் பெருமிதம்
ADDED : செப் 05, 2025 12:46 AM
சென்னை:''உயர் கல்வியில் சிறந்த தமிழகம் என்பது, மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலில், நாட்டின் தலை சிறந்த, 100 உயர் கல்வி நிறுவனங்களில் 17; தலைசிறந்த, 100 கல்லுாரிகளில், 33; தலைசிறந்த, 50 மாநில பல்கலைகளில், 10 என, இப்பட்டியல் அனைத்திலும், அதிக கல்வி நிறுவனங்களுடன், தமிழகம் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய, அனைத்து பின்னணியில் இருந்து வரும் மாணவர்களை வரவேற்று வாய்ப்பளிக்கும், தமிழகத்தின் உயர் கல்வி சூழலுக்கு கிடைத்த வெற்றி இது. இதன் வாயிலாக, உயர் கல்வியில் சிறந்த தமிழகம் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.