சென்னை - பித்ரகுண்டா ரயில் 5 நாட்களுக்கு ரத்து
சென்னை - பித்ரகுண்டா ரயில் 5 நாட்களுக்கு ரத்து
சென்னை - பித்ரகுண்டா ரயில் 5 நாட்களுக்கு ரத்து
ADDED : ஜன 03, 2024 12:02 AM
தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட, ஆந்திரா மாநிலம், விஜயவாடா ரயில் கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணி வரும், 15ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் 10க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல் அதிகாலை 4:55 மணி ரயில் வரும் 22 முதல் 26ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது
சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா மாலை, 4:30 மணி ரயில் வரும், 22 முதல் 26ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.