பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
பொறுப்பு டி.ஜி.பி., நியமனத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
ADDED : செப் 11, 2025 11:53 PM
சென்னை:தமிழக காவல் துறை பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த பொது நல வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக டி.ஜி.பி.,யாக பதவி வகித்த சங்கர் ஜிவால், கடந்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரும், வழக்கறிஞருமான ஆர்.வரதராஜ் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், 'நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களுக்கு எதிராக, அபராதம் விதிப்பது போன்ற கடும் நிலைப்பாட்டை எடுக்க நேரிடும்' எனவும் எச்சரித் தனர்.