'பி.எஸ்., - 4' வாகன பதிவு எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
'பி.எஸ்., - 4' வாகன பதிவு எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
'பி.எஸ்., - 4' வாகன பதிவு எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : மார் 24, 2025 05:39 AM

சென்னை: தமிழகத்தில், 2020ம் ஆண்டுக்கு பின், மோசடி யாக, 'பி.எஸ்., - 4' ரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவ தாஸ்காந்தி வில்சன் என்பவர் தாக்கல் செய்த மனு: இந்தியாவில், 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பி.எஸ்., - 4 வாகனங்கள் பதிவு, 2020 ஏப்ரலுக்கு பின் தடை செய்யப்பட்டது. இருப்பினும், 2020க்கு பின், தமிழகத்தில் பி.எஸ்., - 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.
பி.எஸ்., - 4 ரக வாகனங்கள் உட்பட 315 வாகனங்கள், மோசடியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடியில் வட்டார போக்குவரத்து அலு வலக அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, லஞ்ச ஒழிப்புத் துறை அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மோசடியாக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும் 26ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.