ADDED : மார் 24, 2025 05:38 AM

நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் கீழ்பாதி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி மேலாளர் அருள்நாதன் தலைமை தாங்கினார். தாளாளர் அருள்பிரகாசம், வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர். ஆசிரியை நோயல்மேரி வரவேற்றார்.
மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இந்தியன் வங்கி மேலாளர் பிரவீன்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை துணை பொது மேலாளர் அருண்பிரசாத், சீஷா தொண்டு நிறுவன மேலாளர் சார்லஸ், கவுன்சிலர் ராணி, ஆசிரியை அந்தோணி அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.