Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

எய்ட்ஸ், புற்று நோய் சிகிச்சை விளம்பரங்களுக்கு தடை

Latest Tamil News
சென்னை : 'எய்ட்ஸ், புற்று நோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இந்திய மருத்துவத்தின் மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் ஒய்.ஆர்.மானேக்சா எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மருத்துவ சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான ஒருவழக்கில் உச்ச நீதிமன்றம் சில ஆணைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

பார்வையின்மை, புற்று நோய், எய்ட்ஸ், பக்கவாதம், இதய நோய்கள், சிறுநீரக கற்கள், நரம்பு மண்டல கோளாறுகள், குடல் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எங்கும் விளம்பரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி வெளியிட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல் மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.

இது போன்ற விளம்பரத்தை பார்த்தால் complaintsdmrtn@gmail.com என்ற மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us