அ.தி.மு.க,. பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
அ.தி.மு.க,. பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
அ.தி.மு.க,. பொதுக்குழுவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
UPDATED : ஜன 03, 2024 07:14 PM
ADDED : ஜன 03, 2024 06:17 PM

சென்னை: அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டத்திற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கடந்தாண்டு (2023) ஜூன் 23, மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் அ.தி.மு.க, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதனை எதிர்த்து சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் புதிய பொதுக்குழு கூட்டம் நடைபெற்று எந்த முன்னேற்றம் இல்லாததால், இந்த வழக்கு நிலுவையில் வைத்திருக்க தேவையில்லை என்பதால் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவி்டடார்.
ஜன.9-ல் ம.செ., க்கள் கூட்டம்
இதற்கிடையே ஜன.-9ம் தேதி அ.தி.மு.க, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் கூட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.