துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி
துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி
துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி
ADDED : ஜூலை 13, 2024 01:46 PM

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு துரைமுருகன் வந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, தி.மு.க., எம்எல்ஏ., எழிலன் முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.