Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

UPDATED : ஜூலை 13, 2024 01:02 PMADDED : ஜூலை 13, 2024 12:49 PM


Google News
Latest Tamil News
சென்னை: ‛‛நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: அந்த பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாட்டை பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக. ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அன்றைக்கு தி.மு.க.,வினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை. அதை நாங்கள் திருப்பி பாடும் போது கோபம் வருகிறது.

அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க., தான். ஒவ்வொரு தலைவர்களை பற்றி கருணாநிதி பேசி உள்ளார். கருவாட்டுகாரியின் சீமந்தபுத்திரர், மரமேறி கட்டபீடி என விமர்சித்துள்ளார்.

இழிவாக பேசுவதற்கு தி.மு.க., ஆட்களை வைத்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றனர். நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை.

சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு தெரியாது. சண்டாளன் என கிராமங்களில் இயல்பாக பேசுவர். சினிமா படங்களில் பாடல்கள் வந்துள்ளன.சங்க இலக்கியங்கள், மந்திரங்கள், கந்த சஷ்டியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி அதிகமாக பயன்படுத்தி உள்ளார். படங்களிலும் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார்.

சண்டாளன் என நாங்கள் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போது எங்கு சென்றீர்கள். காதில் பஞ்சுவைத்து படுத்து கொண்டீர்களா. இவ்வாறு சீமான் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us