Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை

ADDED : ஜூலை 13, 2024 02:07 PM


Google News
Latest Tamil News
சென்னை : 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை இயக்கிய ரவி ஷங்கர்(63), சென்னையில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணியாற்றியவர் ரவி ஷங்கர். சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதோடு, அந்த படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடலையும் எழுதினார். பின்னர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். குறிப்பாக இதில் இடம் பெற்ற 'எங்கே அந்த வெண்ணிலா?' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்திற்கு பின் ரவி ஷங்கர் வேறு படங்கள் எதுவும் இயக்கவில்லை. திருமணமே செய்து கொள்ளாமல் சென்னை கே கே நகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனிமை மற்றும் பட வாய்ப்பு இல்லாமல் போனது என அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us