பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி ஆறு வயது சிறுவன் பலி
பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி ஆறு வயது சிறுவன் பலி
பல்லடம் அருகே பள்ளி வாகனம் மோதி ஆறு வயது சிறுவன் பலி
ADDED : ஜன 18, 2024 07:03 PM

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கணதிபாளையத்தை சேர்ந்த ராமர் மகன் சாய்சரன் 6; பொங்கலூர் அருகே ராஜா மெட்ரிக் பள்ளியில் யுகேஜி., படிக்கிறார்.
பொங்கல் விடுமுறை முடிந்து நேற்று வழக்கம் போல் சாய்சரண் பள்ளிக்குச் சென்று மாலை வீடு திரும்பினார். வீட்டுக்கு முன் சாய்சரண் இறங்கிய நிலையில், பஸ் டிரைவரின் அஜாக்கிரதை காரணமாக, சாய்சரண் பஸ்ஸில் அடிபட்டு படுகாயமடைந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


