குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள்; களை கட்டத் தொடங்கியது சந்தை!
குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள்; களை கட்டத் தொடங்கியது சந்தை!
குர்பானிக்காக வந்த 30,000 ஆடுகள்; களை கட்டத் தொடங்கியது சந்தை!

சென்னை: முஸ்லிம்களில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை, வரும் 7 ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஆடு, மாடுகளை பலி கொடுத்து, உறவினர்கள், ஏழைகளுக்கு இறைச்சி தானம் அளிப்பது வழக்கம்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மாதவரம், புழல் காவாங்கரை, புளியந்தோப்பு, தாம்பரம், அடையாறு, பல்லாவரம் உட்பட ள்ளிட்ட சென்னை முழுதும் நேற்று முதல் ஆட்டு சந்தை களை கட்ட ஆரம்பித்துள்ளது.
மாதவரத்தில் கூடிய சந்தையில், ராய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் மதுரை, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மாதவரத்தில் நேற்று தொடங்கிய சந்தையில், 30 முதல் 50 கிலோ வரை உள்ள வெள்ளாடுகள், 35,000 முதல் 50,000 ஆயிரம் ரூபாய் வரை விலை போயின.
சென்னை ஆட்டிறைச்சி மொத்த வியாபாரிகள் சங்க செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:சந்தை தற்போதுதான் துவங்கியுள்ளது. இந்தாண்டு ஆடுகளின் விலை, 500 முதல் 1,000 ரூபாய் வரை கூடியுள்ளது. முன்பெல்லாம் குறிப்பிட்ட ஓரிரு பகுதியில் மட்டுமே ஆட்டு சந்தை கூடும். தற்போது சென்னையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் சந்தை கூடுகிறது.
சென்னையை பொறுத்தவரை அடுக்குமாடி குடியிருப்பு அதிகம் வந்து விட்டது. அதனால், ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன்பே வாங்கி வைப்பது குறைந்து விட்டது. அதனால், பக்ரீத் முந்தைய நாள் விற்பனை அதிகரிக்கும். இந்தாண்டு சென்னையில் மட்டும், 30,000 க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.