இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு; இதோ முழு பட்டியல்!
இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு; இதோ முழு பட்டியல்!
இந்த 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பு; இதோ முழு பட்டியல்!
ADDED : ஜூன் 05, 2025 07:40 AM

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான், பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது பர்மா, காங்கோ குடியரசு உள்ளிட்ட 12 நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய, அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நாடுகள் பின்வருமாறு:
1. ஆப்கானிஸ்தான்,
2. மியான்மர்
3.சாட்
4. காங்கோ
5.எக்குவடோரியல் கினியா
6.எரித்திரியா
7.ஹைட்டி
8.ஈரான்
9.லிபியா
10.சோமாலியா
11.சூடான்
12. ஏமன்
அமெரிக்காவிற்கு செல்ல அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நாடுகள்:
1.புருண்டி,
2.கியூபா,
3.லாவோஸ்,
4.சியரா லியோன்,
5. டோகோ,
6. துர்க்மெனிஸ்தான்,
7. வெனிசுலா
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பாதுகாப்பாக சில நாட்டினரை நாங்கள் குடியேற அனுமதிக்க முடியாது. இதனால் தான் இன்று ஏமன், சோமாலியா, ஹைட்டி, லிபியா மற்றும் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன்.
சமீபத்தில் கொலராடோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலால், வெளிநாட்டினர் சிலர் அமெரிக்காவிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் நுழைந்து அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.