/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா
பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா
பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா
பொன்பத்தி செம்பாத்தம்மன் கோவிலில் தேர் திருவிழா
ADDED : ஜூன் 05, 2025 07:18 AM

செஞ்சி; செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதியம்மன் கோவிலில் மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த உற்சவம், செம்பாத்தம்மன் தேர் விழா நடந்தது.
கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 26ம் தேதி செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், அன்று இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அதனையொட்டி, அன்று காலை செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், ஊரணி பொங்கல் மற்றும் சாகை வார்த்தலும் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மன், கிருஷ்ணர், அர்ஜூனன், திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடித்தனர். நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு துரியோதனன் படுகளமும், 3:00 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது. இன்று தர்மர் பட்டாபிஷேக விழா நடைபெற உள்ளது.