கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
UPDATED : ஜூன் 03, 2024 10:15 AM
ADDED : ஜூன் 03, 2024 10:08 AM

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர் வெளியிட்டார்.
முன்னதாக, எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் வணங்குவது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
‛‛வாழும் காலத்தில் ஒளி தரும் உதயசூரியனாய் வாழ்ந்து, மறைந்த பிறகும் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிக் கொண்டிருப்பவர் தான் தலைவர் கருணாநிதி. நீங்கள் பாதை அமைத்தீர்கள் நாங்கள் பயணத்தை தொடர்கிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.