Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

45 மணி நேர தியானம்: மனதில் தோன்றிய சிந்தனைகளை பகிர்ந்த பிரதமர் மோடி

ADDED : ஜூன் 03, 2024 10:49 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கன்னியாகுமரியில் 45 மணி நேரம் தியானத்தில் இருந்த போது மனதில் தோன்றிய சிந்தனைகளை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சீர்திருத்தம் தொடர்பான நமது பாரம்பரிய சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

சீர்திருத்தத்தின் திசையை நோக்கி வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நாம் முன்னேறி செல்ல வேண்டும். தேர்தல் தீவிரம் என் உள்ளத்திலும், மனதிலும் எதிரொலிப்பது இயல்பு. பொதுக்கூட்டத்திலும், சாலை பேரணியிலும் பார்த்த பல முகங்கள் என் கண் முன்னே வந்து சென்றது.

அரசியல் விவாதங்கள்

பெண் சக்தியின் ஆசீர்வாதங்கள், நம்பிக்கை, பாசம், இவை அனைத்தும் மிகவும் நெகிழ்ச்சியான அனுபமாக இருந்தது. நான் ஒரு தியான நிலைக்குள் நுழைந்தேன். என் கண்கள் ஈரமாகிக் கொண்டிருந்தன. சூடான அரசியல் விவாதங்கள், தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் போன்ற தேர்தல் குணாதிசயங்கள் அனைத்தும் வெற்றிடத்தில் மறைந்து போயின. என் மனம் வெளி உலகத்திலிருந்து முற்றிலும் விலகியது. பாரதத்திற்கு சேவை செய்யவும், நமது நாட்டின் சிறப்பை நோக்கிய பயணத்தில் நமது பங்கை நிறைவேற்றவும் கடவுள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளார்.

ஒவ்வொரு நொடியிலும்...!

பாரதத்தில் கடவுள் நமக்கு பிறக்க அருளியதை நினைத்து ஒவ்வொரு நொடியிலும் நாம் பெருமை கொள்ள வேண்டும். ஒரு தேசமாக காலாவதியான சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தொழில்முறை அவ நம்பிக்கையாளர்களின் அழுத்தத்திலிருந்து நமது சமூகத்தை விடுவிக்க வேண்டும்.

வளர்ச்சிப் பாதை

21ம் நூற்றாண்டில் உலகம் பல நம்பிக்கைகளுடன் பாரதத்தை எதிர்நோக்கி பார்க்கிறது. பாரதத்தின் வளர்ச்சிப் பாதை நம்மை பெருமைப்பட வைக்கிறது. அதே நேரத்தில், 140 கோடி குடிமக்களுக்கும் தனது இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும். நாம் புதிய கனவுகளை காண வேண்டும். அவற்றை நிஜமாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us