இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : ஜூன் 17, 2024 07:28 AM

சென்னை: இன்று (ஜூன் 17) பக்ரீத் பண்டிகை உலகில் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.
இறைவனின் தூதரான இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக முஸ்லீம்களால் கொண்டாடப்படுகிறது. ‛ஹஜ்' செய்வது என்பது இஸ்லாம் மதத்தின்படி வாழ்நாளில் ஐந்தாவது முக்கிய கடமையாக பார்க்கப்படுகிறது. ஹஜ் என்பது புனிதப் பயணமாக மக்கா செல்வதாகும்
இந்த புனிதப் பயணத்தின் கடைசி கடமையாக இருப்பது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடக்கும். இப் பெருநாளில் தொழுகை நடந்த பின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது.
இத்திருநாளில் இந்தியாவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களும் கூட்டமாக சென்று தொழுகையில் ஈடுபடுவார்கள். முஸ்லிம்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கெள்வர்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறியை பின்பற்றி வாழும் இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகள் தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):
பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழும் மனநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்