/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்ட சாதுக்கள்; கிரிவலப்பாதையில் அலறியடித்து பக்தர்கள் ஓட்டம் உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்ட சாதுக்கள்; கிரிவலப்பாதையில் அலறியடித்து பக்தர்கள் ஓட்டம்
உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்ட சாதுக்கள்; கிரிவலப்பாதையில் அலறியடித்து பக்தர்கள் ஓட்டம்
உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்ட சாதுக்கள்; கிரிவலப்பாதையில் அலறியடித்து பக்தர்கள் ஓட்டம்
உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்ட சாதுக்கள்; கிரிவலப்பாதையில் அலறியடித்து பக்தர்கள் ஓட்டம்
ADDED : ஜூன் 17, 2024 07:09 AM

திருவண்ணாமலை : 'போதை' சாதுக்கள், உருட்டுக்கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால், கிரிவலம் சென்ற பக்தர்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள மலையை, பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபடுவதால் தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர். பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையை வலம் வருகின்றனர். இப்படி வரும் பக்தர்கள், கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு பணம், அன்னதானம், வஸ்திர தானம் செய்து வருகின்றனர்.
இதனால் அங்கு சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, 10,000க்கும் மேற்பட்ட சாதுக்கள், கிரிவலப்பாதை பிளாட்பாரத்தில் தங்கியுள்ளனர். இவர்களில் பலர், பக்தர்கள் கொடுக்கும் பணத்தில் மது, கள்ளச்சாராயம், புகையிலை உள்ளிட்ட பல்வேறு வகை போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, இரவில் மது போதைகளில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சூரிய லிங்கம் அருகே போதையில் சாதுக்கள் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டைகளாலும், கற்களாலும் தாக்கிக்கொண்டனர். இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அலறியடித்து, ஆங்காங்கே ஓட்டம் பிடித்தனர்.
இதை அறிந்து அங்கு வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார், சாதுக்களை எச்சரித்து கலைந்து போக செய்தனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இதுபோன்ற சாதுக்களின் செயல் தொடரும் என்பதால், இதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த, பெண் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.