/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ துப்பாக்கி தோட்டா பாய்ந்து முதியவர் காயம்; 2 பேர் கைது துப்பாக்கி தோட்டா பாய்ந்து முதியவர் காயம்; 2 பேர் கைது
துப்பாக்கி தோட்டா பாய்ந்து முதியவர் காயம்; 2 பேர் கைது
துப்பாக்கி தோட்டா பாய்ந்து முதியவர் காயம்; 2 பேர் கைது
துப்பாக்கி தோட்டா பாய்ந்து முதியவர் காயம்; 2 பேர் கைது
ADDED : ஜூன் 18, 2024 12:17 AM
தண்டராம்பட்டு : திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு அண்டம்பள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களை பார்த்த பைக்கில் வந்தவர்கள், ஏதோ ஒன்றை துாக்கி வீசி விட்டு தப்பினர். அதை போலீசார் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று காலை தண்டரை கிராமத்தை சேர்ந்த தவமணி, 62, என்பவர், அவரது விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு நிலத்தின் அருகே நாட்டு துப்பாக்கி கிடந்தது. அதை, சாதாரண கட்டை என நினைத்து, துாக்கி வீசியபோது, தோட்டாவுடன் இருந்த அந்த துப்பாக்கி திடீரென வெடித்து, அவர் மீது குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். வெறையூர் போலீசார் விசாரித்ததில் துப்பாக்கியை வீசி சென்றவர்கள், வன விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்தபோது, போலீசார் வருவதை கண்டதும் வீசி சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, பாண்டியன், மணிகண்டனை கைது செய்தனர். தப்பிய பாலமுருகனை தேடி வருகின்றனர்.