ரூ.5920 கோடி வருவாய் கண்ட பத்திரப்பதிவுத்துறை
ரூ.5920 கோடி வருவாய் கண்ட பத்திரப்பதிவுத்துறை
ரூ.5920 கோடி வருவாய் கண்ட பத்திரப்பதிவுத்துறை
ADDED : ஜூலை 19, 2024 02:27 AM
சென்னை:பத்திரப்பதிவு வாயிலாக, கடந்த நான்கு மாதங்களில், 5920 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக, பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக கிடைக்கும் வருவாயை பெருக்க, மாதம்தோறும் சீராய்வு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதில், பத்திரப்பதிவு, வழிகாட்டி மதிப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.
சென்னை நந்தனத்தில் நேற்று நடந்த சீராய்வு கூட்டத்திற்கு, அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். துறை செயலர், பதிவுத் துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் நடந்த ஆலோசனைக்கு பின், பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: நடப்பு நிதி ஆண்டில் பத்திரப்பதிவு வாயிலாக, ஏப்., 1 முதல், ஜூலை 17 வரையிலான காலத்தில், 5920 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டில், இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்டதை விட, 821 கோடி ரூபாய் அதிகம்.
'சார் பதிவாளர் அலுவலகங்களில், டி.ஐ.ஜி.,க்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கீகாரமில்லாத மனை பதிவுகளை தடுக்க வேண்டும். அதேநேரத்தில், பத்திரப்பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்ய கூடாது' என அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.