/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊராட்சி மன்ற செயலர் அறைக்கு இரு பூட்டு போட்டதால் அதிர்ச்சி ஊராட்சி மன்ற செயலர் அறைக்கு இரு பூட்டு போட்டதால் அதிர்ச்சி
ஊராட்சி மன்ற செயலர் அறைக்கு இரு பூட்டு போட்டதால் அதிர்ச்சி
ஊராட்சி மன்ற செயலர் அறைக்கு இரு பூட்டு போட்டதால் அதிர்ச்சி
ஊராட்சி மன்ற செயலர் அறைக்கு இரு பூட்டு போட்டதால் அதிர்ச்சி
ADDED : ஜூலை 19, 2024 02:28 AM
கொளத்துார்: மூலக்காடு ஊராட்சி மன்ற செயலர் அலுவலகத்தின் கதவை, இரு பூட்டுகள் போட்டு பூட்டியிருந்தது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சேலம் மாவட்டம், கொளத்துார் ஒன்றியத்தில், 14 ஊராட்சிகள் உள்ளன. இதில் மூலக்காடு, தின்னப்பட்டி உள்பட, ஆறு ஊராட்சி செயலர்கள் கடந்த மாதம், 27ல் இடமாற்றம் செய்யப்-பட்டனர்.
இரு வாரத்துக்கு முன்பு, நிர்வாக காரணங்கள் கருதி இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து. தங்களது வழக்கமான ஊராட்சிகளில் பணிபுரிந்தனர்.
அதேநேரம், தின்னப்பட்டி ஊராட்சி செயலருக்கு, மூலக்காடு ஊராட்சி செயலராக தலைவர் இடமாற்ற ஒப்புதல் வழங்கினார். இதனால், தின்னப்பட்டி செயலர் பெரியசாமி மூலக்காட்டில் பணி செய்தார். அதே நேரம் மூலக்காடு ஊராட்சி செயலர் பிரபா-கரன், இடமாற்றம் ரத்தானதை தொடர்ந்து அதே ஊராட்சியில் செயலராக பணி செய்தார். ஒரே ஊராட்சியில் இரு செயலர்கள் பணிபுரிந்தது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.
நேற்று முன்தினம் கொளத்துார் ஒன்றிய ஆணையாளர் உத்தரவு-படி, தின்னப்பட்டி ஊராட்சி செயலராக பெரியசாமி மீண்டும் பொறுப்பேற்று கொண்டார். அதே நேரம் நேற்று மூலக்காடு ஊராட்சியில் செயலர் அறை, இரு பூட்டு போட்டு பூட்டப்பட்டி-ருந்தது. நேற்று கருங்கல்லுார் ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க, மூலக்காடு தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் சென்று விட்டதாக தெரிகிறது. எனினும் மூலக்-காடு ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு இரு பூட்டு போடப்பட்-டது, அப்பகுதி மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து, மூலக்காடு ஊராட்சி மன்ற தலைவர் மணிமொழி-யிடம் நேரில் கேட்டபோது, அவர் பதில் எதுவும் கூறாமல்
மவுனமாக சென்று விட்டார்.