/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல் சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்
சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்
சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்
சிறுத்தை நடமாட்டம் குறித்து டிரோன் மூலம் வனத்துறை தேடல்
ADDED : ஜூலை 19, 2024 02:05 AM
ஜலகண்டாபுரம்: பசுவை கொன்ற சிறுத்தை நடமாட்டம் குறித்து, டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்துார் கிராமம், குரங்கு பாலிக்க-ரடு என்ற பகுதியில் பூபாலன், 44, என்பவருடைய தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசுமாடு சமீபத்தில், சிறுத்தை கடித்து இறந்து கிடந்தது. தோட்டத்தில் பதிந்த கால்தடங்களை கொண்டு சிறுத்தை என தெரியவந்தது. மேட்டூர் வனச்சரகர் சிவானந்தன் தலைமையில், வனத்
துறையினர், சம்பவ இடத்தில் கூண்டு மற்றும் காண்காணிப்பு கேமராக்களை வைத்து கண்காணித்தனர். ஆனால் நேற்று சிறுத்தை சிக்கவில்லை. தொடர்ந்து மலைப்பகுதியில் பதுங்கி உள்ளதா என, இரண்டாவது நாளாக நேற்று வனத்துறையினர் 'டிரோன்' பறக்கவிட்டு அதன் மூலம் சிறுத்தை தென்படுகிறதா என கண்காணித்தனர்.இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'சிறுத்தை நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்-டுள்ளோம். கூண்டு வைத்துள்ள பகுதிக்கு பொதுமக்கள் கூட்டம் கூடாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,' என்-றனர்.