/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை 10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை
10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை
10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை
10 ஆண்டுகளில் காணாமல் போன 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை
ADDED : ஜூலை 19, 2024 02:04 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் காணாமல் போன, 234 பேரை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்-ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில் காணாமல் போன-வர்கள், அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள் யார் என கண்டுபிடிக்க,
எஸ்.பி. அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சரவணக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த, 10 ஆண்டுகளில், 360 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில், 126 பேர் கண்டு
பிடிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள ஆண்கள், 118 பேர், 85 பெண்கள், 31 குழந்தைகள் என மொத்தம், 234 பேரை கண்டுபி-டிக்க வேண்டி உள்ளது. அதேபோல் அடையாளம் தெரியாமல் இறந்து போனவர்கள், சாலையோரம் இறந்து போனவர்கள் என, 104 பேரின் விவரங்களையும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக, 6 சப்-டிவிசனில், ஒரு டிவிஷனுக்கு ஒரு எஸ்.ஐ., ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு போலீசார் இடம் பெற்று உள்ளனர். இந்த தனிப்படையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.