Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணையில் அனுமதி இன்றி மண் ஏற்றிய டிராக்டர்கள் நிறுத்தம்

மேட்டூர் அணையில் அனுமதி இன்றி மண் ஏற்றிய டிராக்டர்கள் நிறுத்தம்

மேட்டூர் அணையில் அனுமதி இன்றி மண் ஏற்றிய டிராக்டர்கள் நிறுத்தம்

மேட்டூர் அணையில் அனுமதி இன்றி மண் ஏற்றிய டிராக்டர்கள் நிறுத்தம்

ADDED : ஜூலை 19, 2024 02:04 AM


Google News
மேட்டூர்: மேட்டூர் அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில் கடந்த, 15 முதல் வண்டல் மண் ஏற்றி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்-பட்டது.

அணை மூலக்காடு, தின்னப்பட்டி, பண்ணவாடி, செட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் டிராக்டர்களில் மட்டுமே வண்டல் மண் ஏற்றி செல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

மூலக்காடு நீர்பரப்பு பகுதி யில் நேற்று ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் டிரைவர்கள் வண்டல், செம்மண் ஏற்றி நீண்ட

வரிசையில் சென்றனர். சில டிரைவர்கள் மண் அள்ளும் அனுமதி பெறவில்லை. மண் ஏற்றி சென்ற சில டிராக்டர்களில் முன் மற்றும் பின் பக்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் வழங்கிய பதிவு எண் கூட எழுதவில்லை. அந்த டிராக்டர்களை போலீசார் சாலையோரம் நிறுத்தி வைத்தனர். வரும் நாட்களில் அணை நீர்மட்டம் அதிகரித்து நீர்

பரப்பு பகுதி மூழ்கி விடும். அப்போது மண் அள்ள முடியாது என்பதால், நீர்பரப்பு பகுதியில் ஒதுக்கீடு செய்த நான்கு இடங்க-ளிலும், நேற்று டிராக்டரில் டிரைவர்கள் பல டன் மண்ணை ஏற்றி சென்றனர்.

முற்றுகை போராட்டம்

வாழப்பாடி அடுத்த பேளூர் அருகே சின்ன ஏரியில், அனுமதி இல்லாத வாகனங்களில், நிர்ணயித்த அளவை விட அதிகமாக, மண் எடுப்பதால், நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாக கூறி நேற்று காலை, 10:00 மணிக்கு அப்பகுதி மக்கள், 50க்கும் மேற்-பட்டோர் மண் அள்ளிச்சென்ற டிராக்டரை சிறைபிடித்து முற்று-கையிட்டு போராட்டம் நடத்தினர்.

வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் அப்பகுதிக்கு சென்று, டிராக்டரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அனுமதி உள்ள வாக-னங்கள் மட்டும் மண் எடுத்துச் செல்ல அனுமதிப்பதாக தெரிவித்-ததால், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us