/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டவுன் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறிப்பு:4 பெண்கள் கைது டவுன் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறிப்பு:4 பெண்கள் கைது
டவுன் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறிப்பு:4 பெண்கள் கைது
டவுன் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறிப்பு:4 பெண்கள் கைது
டவுன் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை பறிப்பு:4 பெண்கள் கைது
ADDED : ஜூலை 19, 2024 02:03 AM
சேலம்: வாழப்பாடி, மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயம்மாள், 66, சேலத்தில் ஜவுளி வாங்குவதற்காக, நேற்று தனது மகன் சரவணன் உடன், சேலம் புது பஸ் ஸ்டாண்ட் வந்-துள்ளார். அங்கிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வர டவுன் பஸ் ஏறியுள்ளார். இவரை சுற்றி நின்று கொண்டிருந்த, நான்கு பெண்-களில் ஒருவர் இவரது பையில் இருந்த மணி பர்ஸை திருடிக்-கொண்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி தப்பியோடினார். அவரை தொடர்ந்து மற்ற மூன்று பெண்களும் தப்பினர். பர்ஸில் 8,000 ரூபாய், இரண்டு பவுன் நகை வைத்திருந்ததாக, பள்ளப்பட்டி போலீசில் ஜெயம்மாள் புகார் அளித்துள்ளார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், ராமநாதபுரம் மாவட்டம் சாந்தி, 55, மாயா, 38, ஜோலார்பேட்டை மோனிஷா, 31, திருப்-பத்துார் கன்னியம்மாள், 38 ஆகிய நான்கு பேரை கைது செய்-தனர்.