ADDED : ஜூலை 19, 2024 02:29 AM
சேலம்: சர்வதேச நிலவரத்தின் அடிப்படையில், நேற்று முன்தினம் தங்-கத்தின் விலை சேலத்தில் புதிய உச்சமாக பவுன், 55,000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று தங்-கத்தின் விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராம், 6,875, பவுன், 55,000, வெள்ளி கிராம், 99.50, பார் வெள்ளி, 99,500 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று தங்கம் கிராமிற்கு, 15 குறைந்து, கிராம், 6,860, பவுனுக்கு, 120 குறைந்து, 54,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமிற்கு, 1.30 காசு குறைந்து, கிராம், 98.20, பார் வெள்ளி, 1,300 குறைந்து, 98,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.