/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: போலீஸ் கமிஷனர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: போலீஸ் கமிஷனர்
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: போலீஸ் கமிஷனர்
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: போலீஸ் கமிஷனர்
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்: போலீஸ் கமிஷனர்
ADDED : ஜூலை 19, 2024 02:30 AM
சேலம்: ''சேலம் மாநகரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும்,'' என, சேலம் போலீஸ் கமிஷனர் பிரவீண் குமார் அபினபு தெரிவித்தார்.
அவர் நமது நிருபரிடம் கூறியதாவது: நான் பொறுப்பேற்ற பிறகு, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நேரடியாக சென்று, மக்கள் கொடுக்கும் புகார் குறித்தும், ஸ்டேஷன் செயல்பாடு குறித்தும் ஆய்வு செய்துள்ளேன். குற்றவியல் நடவடிக்கைக்கு முற்றுப்-புள்ளி வைக்கப்படும். இளைய சமுதாயத்தினர் போதை பழக்-கத்திற்கு அடிமையாகி விடக்
கூடாது. போதையை ஒழிக்க தனி கவனம் செலுத்தப்படும். குறிப்பாக, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும். அதேபோல், சந்து கடை விற்பனையும் தடுக்கப்படும். இதற்காக சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.
மாநகர் முழுவதும் வாகன சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்-ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் குடும்பத்தை நினைத்து பார்த்து ஓட்டுவது முக்கியம். சிறுவர்களிடம் இரு சக்கர வாகனத்தை, பெற்றோர் கொடுக்கக்கூடாது.
மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், ஒவ்வொரு புதன்கிழ-மையும், மக்கள் புகார் குறித்த முகாம் நடைபெறுகிறது. இன்ஸ்-பெக்டர்கள் பல்வேறு வேலை சுமையில் இருந்தாலும், மக்களுக்-காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, நாள்தோறும் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, 'சிசிடிவி' கேமராக்களின் செயல்பாடுகளில், சில இடங்களில் குறைபாடுகள் உள்ளன. உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்-ளது. இன்ஸ்பெக்டர்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், எந்த ஒரு குற்றச் செயலாக இருந்தாலும், சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையாக செயல்பட வேண்டும் என அறி-வுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.