ADDED : ஜூலை 19, 2024 02:27 AM
நாமக்கல்: கவிஞர் வாலியின், 'திரைப்பாட்டு முழக்கங்கள்' என்ற திறனாய்வு கட்டுரைகள் நுால் வெளியீட்டு விழா, நாமக்கல்லில் நேற்று நடந்-தது. கவிஞர் பதுமைச்செல்வன் எழுதிய இந்நுால், கவிஞர் வாலியின், 11ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் நடந்தது. நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள் தலைமை வகித்தார். சேலம் மண்டல திரைப்பட வினியோகஸ்தர்கள் நலச்சங்க நிர்வாகி பரமசிவம் நுாலை வெளியிட, மோகனுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் நவலடி பெற்றுக்கொண்டார்.
சென்னை வாலி பதிப்பக உரிமையாளர் நெல்லை ஜெயந்தா, திரைப்படத்துறையில் கவிஞர் வாலியின் சாதனைகள், கண்ணதா-சனுக்கு இணையாக எழுதிய தத்துவ பாடல்கள், கவிதைகள் குறித்து பேசினார். நுாலாசிரியர் கவிஞர் பதுமை செல்வன் ஏற்பு-ரையாற்றினார். இதில், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.