Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

வாலிபருக்கு அரிவாள் வெட்டு மொளசி போலீசார் விசாரணை

ADDED : ஜூலை 19, 2024 02:26 AM


Google News
பள்ளிப்பாளையம்: கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சிவா, 20. அதே ஊரை சேர்ந்தவர் சிவக்குமார், 30. இவர்கள் இருவரும், பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த இரையமங்கலம் பகு-தியில் கரும்பு வெட்டும் பணிக்காக, கடந்த, 10 நாட்களுக்கு முன் வந்தனர்.

சிவக்குமாருக்கும் இவரது மனைவிக்கு இடையே கருத்து வேறு-பாடு ஏற்பட்டு, ஆறு மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் சிவா தான் என, சிவக்குமார் நினைத்துக்-கொண்டு, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று அதிகாலை, மீண்டும் இருவக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார், அருகில் கிடந்த கரும்பு வெட்டும் அரிவாளால், சிவாவை வெட்-டினார்.

இதில் பலத்த காயமடைந்த சிவா, திருச்செங்கோடு அரசு மருத்-துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொளசி போலீசார், சிவக்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us