/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாளை இடைநிலை ஆசிரியர் தேர்வு;2 மையங்களில் 65 'சிசிடிவி'க்கள் பொருத்தம் நாளை இடைநிலை ஆசிரியர் தேர்வு;2 மையங்களில் 65 'சிசிடிவி'க்கள் பொருத்தம்
நாளை இடைநிலை ஆசிரியர் தேர்வு;2 மையங்களில் 65 'சிசிடிவி'க்கள் பொருத்தம்
நாளை இடைநிலை ஆசிரியர் தேர்வு;2 மையங்களில் 65 'சிசிடிவி'க்கள் பொருத்தம்
நாளை இடைநிலை ஆசிரியர் தேர்வு;2 மையங்களில் 65 'சிசிடிவி'க்கள் பொருத்தம்
ADDED : ஜூலை 20, 2024 02:40 AM
நாமக்கல்:நாமக்கல்லில் நாளை, இரண்டு மையங்களில் இடைநிலை ஆசிரியர் தேர்வு நடக்கிறது.
இதற்காக, 65, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் தேர்வு, நாளை (ஜூலை, 21) நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், இத்தேர்விற்கு, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இடைநிலை ஆசிரியர் தேர்வை, 501 தேர்வர்கள் எழுதுகின்றனர். தேர்வர்கள் தேர்வெழுத தேவையான முன்னேற்பாடு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.தேர்வு நாளன்று, தேர்வர்கள் மையத்திற்கு, காலை, 8:30 முதல், 9:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை, 9:30 மணிக்கு பின், தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு மையத்தில், ஒவ்வொரு அறைகளிலும் ஒரு கண்காணிப்பு கேமரா, வராண்டாவில் ஒன்று என, பொருத்துவது வழக்கம்.ஆனால், தற்போது, ஒரு அறைக்குள் இரண்டும், வராண்டாவில் ஒன்றும் பொருத்தப்படுகிறது. தேர்வு மையத்தில் உள்ள அறைகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு தேர்வு மையங்களில் மொத்தம், 65 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.