ஆட்சி கவிழ்ந்து விடும் விடுதலை சிறுத்தைகள் சாபம்
ஆட்சி கவிழ்ந்து விடும் விடுதலை சிறுத்தைகள் சாபம்
ஆட்சி கவிழ்ந்து விடும் விடுதலை சிறுத்தைகள் சாபம்
ADDED : மார் 13, 2025 07:18 PM
துாத்துக்குடி:'நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் ஆட்சி நடத்தினால் ஆட்சி கவிழ்ந்து விடும்' என, திருக்குறளை மேற்கோள் காட்டி. திருச்செந்துாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னிஅரசு பேசினார்.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகே, பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருச்செந்துாரில் நேற்று முன்தினம் வி.சி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் வன்னியரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும். ஜாதிய வன்மத்தை பரப்புகிற, ஜாதி வெறியர்களை தடுத்து நிறுத்தும் வகையில் ஒரு புலனாய்வு துறையை முதல்வர் உருவாக்க வேண்டும். '
'ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்' என திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆளும் அரசன், ஒற்றர் படை என்ற உளவுதுறையை வைத்து கண்டறிய வேண்டும். அப்படி கண்டறியவில்லை என்றால், ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதே அந்த குறளின் பொருள்.
இவ்வாறு அவர் பேசினார்.