தி.மு.க., ஆட்சியில் பறிபோன மாநில உரிமை: உதயகுமார்
தி.மு.க., ஆட்சியில் பறிபோன மாநில உரிமை: உதயகுமார்
தி.மு.க., ஆட்சியில் பறிபோன மாநில உரிமை: உதயகுமார்
ADDED : மார் 13, 2025 07:17 PM
மதுரை:மதுரையில், சட்டசபை எதிர்கட்சித் தலைவர் உதயகுமார் அளித்த பேட்டி:
தி.மு.க., அரசு எல்லா நிலைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இது நாள் வரை, மறைமுகமாக நடந்த குடும்ப அரசியல், வாரிசு அரசியல், மன்னர் ஆட்சியை, தற்போது பகிரங்கமாக செய்ய துணிந்து விட்டனர். தமிழகம் நரக பூமியாகி விட்டது.
பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக உரிமை பறிகொடுக்கப்பட்டு விட்டது என்கிறார் ஸ்டாலின். அது பச்சைப்பொய். தமிழக உரிமையை விட்டுக் கொடுத்தது தி.மு.க., அரசுதான். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தவர் பழனிசாமி. அதேபோன்று முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு சட்டப் போராட்டம் நடத்தியவர் ஜெயலலிதா. அதைப் பின் தொடர்ந்தவர் பழனிசாமி.
தன் மீதுள்ள தோல்வியை மறைப்பதற்காக, மக்களை திசை திருப்ப, தற்போது தமிழ் மொழிக்கு ஆபத்து என்று ஒரு புதிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். அவர் இரட்டை வேடம் போட்டு வருவதை பழனிசாமி தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.