Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 'தமிழக பா.ஜ., குரல் தொடர்ந்து ஒலிக்கும்!'

'தமிழக பா.ஜ., குரல் தொடர்ந்து ஒலிக்கும்!'

'தமிழக பா.ஜ., குரல் தொடர்ந்து ஒலிக்கும்!'

'தமிழக பா.ஜ., குரல் தொடர்ந்து ஒலிக்கும்!'

ADDED : ஜூன் 05, 2024 02:25 AM


Google News
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கை:

இம்முறை மக்களின் பிரதிநிதிகளாக பார்லிமென்ட் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், வரும் காலங்களில் உங்களின் அன்பையும், அங்கீகாரத்தையும் பெற, எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.

பிரதமர் மோடி, பத்து ஆண்டுகளாக நாட்டின் வளங்களையோ, மக்கள் வரி பணத்தையோ சுரண்டாமல், ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத, நல்லாட்சியை வழங்கியிருக்கிறார் என்பது நமக்கு பெருமை.

நாட்டின் உள்கட்டமைப்பு, விவசாயம், சாமானிய மக்கள், பெண்கள், இளைஞர் மேம்பாடு சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல்அனைத்து பயனும் நேரடியாக மக்களை சென்று அடைய வழிவகை செய்து இருக்கிறார்.

பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைந்து இருக்கிறது என்பதை, தற்போதையதேர்தல் முடிவுகளில், தமிழகம் முழுதும் பரவலாக கிடைத்துள்ள ஓட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத சக்தியாக தொடர, தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக மக்களின் நலனுக்கான குரலாய், தேசிய ஜனநாயக கூட்டணியின்குரலும், தமிழக பா.ஜ.,வின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us