ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: கமல்
ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: கமல்
ஸ்டாலின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: கமல்
UPDATED : ஜூன் 05, 2024 03:25 AM
ADDED : ஜூன் 05, 2024 02:26 AM

சென்னை: ‛தி.மு.க., அரசு செய்து காட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை, அதன் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அறுவடை செய்திருக்கிறது' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்காக சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப் போகும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க, மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
தி.மு.க., தலைவராக, 2019 லோக்சபா தேர்தல் துவங்கி, தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் முதல்வர் ஸ்டாலின் வெற்றியை குவித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்; பாராட்டுகள்.
சிந்தாமல், சிதறாமல் சந்தேகம் இல்லாமல், தி.மு.க., கூட்டணி பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை. இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்தார்.