கையெழுத்து இயக்கம்: பஸ் ஊழியர்கள் துவக்கம்
கையெழுத்து இயக்கம்: பஸ் ஊழியர்கள் துவக்கம்
கையெழுத்து இயக்கம்: பஸ் ஊழியர்கள் துவக்கம்
ADDED : ஜூன் 18, 2024 04:46 AM
சென்னை : புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள், நேற்று கையெழுத்து இயக்கம் துவக்கினர்.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டும். 15வது புதிய ஊதிய ஒப்பந்தப் பேச்சைத் துவக்க வேண்டும்.
ஓய்வூதியருக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
பல்வேறு கட்ட பேச்சு நடத்தப்பட்டுள்ள நிலையில், இன்னமும் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை. அதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், தமிழகம் முழுதும் நேற்று கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது.
இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறியதாவது:
பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தித் துவங்கியுள்ள கையெழுத்து இயக்கம், வரும் 21 வரை நடக்கிறது. 300க்கும் மேற்பட்ட பணிமனைகளில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று, முதல்வருக்கு அனுப்ப உள்ளோம்.
தேர்தல் நடத்தை காரணமாக, அரசு தாமதம் செய்தது. இனியும் தாமதிக்காமல், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.