துாய்மை பணியாளர்கள் டிரைவர்களாக 'அவதாரம்'
துாய்மை பணியாளர்கள் டிரைவர்களாக 'அவதாரம்'
துாய்மை பணியாளர்கள் டிரைவர்களாக 'அவதாரம்'
ADDED : ஜூன் 04, 2024 01:25 AM
திருப்பூர்: மாநிலத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துாய்மைப்பணி, வாகன ஓட்டுனர் பணி என, அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில், டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், அந்த பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை.
இதனால், நகராட்சி தலைவர், கமிஷனர், பொறியாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட அரசால் வழங்கப்பட்ட ஜீப் ஓட்டுவதற்கு டிரைவர்கள் இல்லை.
எனவே, வாகனம் ஓட்டத் தெரிந்த, துாய்மைப் பணியாளர்களை, டிரைவர்களாக அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
உள்ளாட்சி அலுவலர்கள் சிலர் கூறியதாவது:
தற்போது பணியில் உள்ள நிரந்தர, தற்காலிக துாய்மை பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள் பணி ஓய்வு பெற்று விட்டால், அந்த பணியிடங்கள் நிரப்பப்பட மாட்டாது.
தனியார் வாயிலாகவே அப்பணிக்கு ஆட்களை நியமித்துக் கொள்ள வேண்டும் என, அரசாணை உள்ளது. எனவே, வாகனம் ஓட்டத் தெரிந்த துாய்மைப் பணியாளர்களை, தலைவர் மற்றும் அதிகாரிகள் தங்களின் ஜீப் டிரைவர்களாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.