/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான்
ADDED : ஜூன் 04, 2024 01:25 AM
கோவை;போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை துடியலுார் அடுத்துள்ள, தொப்பம்பட்டி எமரால்டு விளையாட்டு மைதானத்தில், பயில்வான் ரன்னர்ஸ் குழு சார்பில், 4வது வருடமாக போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது.
காலை, 6:00 மணியளவில் விளையாட்டு மைதானத்தில் துவங்கிய, மராத்தான் ஓட்டம் கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் குமரபுரம், நரசிம்ம நாயக்கன்பாளையம், காஸ் கம்பெனி வழியாக சென்று பெரியநாயக்கன்பாளையத்தை அடைந்து, மீண்டும் விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
மராத்தான் ஓட்டம் 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 'உடலினை உறுதி செய்' என்ற பெயரில், தண்டால், பிளாங் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பொழுதுபோக்கு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஓடி முடித்தவர்களுக்கு இளநீர், கரும்பு ஜீஸ், சிக்கன் சூப், சைவ, அசைவ அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன.
மராத்தானில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காங்கயம், சென்னை, பெங்களூரு மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரத் திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.