/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முதல் டிவிஷன் கிரிக்கெட் விஜய் அபிமன்யு அசத்தல் முதல் டிவிஷன் கிரிக்கெட் விஜய் அபிமன்யு அசத்தல்
முதல் டிவிஷன் கிரிக்கெட் விஜய் அபிமன்யு அசத்தல்
முதல் டிவிஷன் கிரிக்கெட் விஜய் அபிமன்யு அசத்தல்
முதல் டிவிஷன் கிரிக்கெட் விஜய் அபிமன்யு அசத்தல்
ADDED : ஜூன் 04, 2024 01:26 AM

கோவை;மாவட்ட அளவில் நடந்த முதல் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், விஜய் அபிமன்யு சதம் விளாச, ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'லட்சுமி கார்டு குளோத்திங் கோப்பை'க்கான முதல் டிவிஷன் கிரிக்கெட்லீக் போட்டி, மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது.
இப்போட்டியில், ரெயின்போ கிரிக்கெட் கிளப் மற்றும் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ரெயின்போ கிரிக்கெட் கிளப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 245 ரன்கள் சேர்த்தது. அணிக்காக சூரியகாந்த், 85 ரன்களும், சக்திவேல், 59 ரன்களும் பொறுப்பாக விளையாடி எடுத்தனர்.
அடுத்து களம் இறங்கிய ராமகிருஷ்ணா கல்லுாரி அணியில், விஜய் அபிமன்யு, 113, சச்சின், 60, ரன்கள் சேர்த்தனர்.
அவர்களின் நிதானமான ஆட்டம் கை கொடுக்க, ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 41.2 ஓவர்களில் நான்கு விக்கெட் மட்டும் இழந்து, 246 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.