/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சாய்கின்றன மரங்கள்; மாநகராட்சி கவனிக்குமா? சாய்கின்றன மரங்கள்; மாநகராட்சி கவனிக்குமா?
சாய்கின்றன மரங்கள்; மாநகராட்சி கவனிக்குமா?
சாய்கின்றன மரங்கள்; மாநகராட்சி கவனிக்குமா?
சாய்கின்றன மரங்கள்; மாநகராட்சி கவனிக்குமா?
ADDED : ஜூன் 04, 2024 01:27 AM

போத்தனூர்:குறிச்சி குளக்கரையில் நடப்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மாநகராட்சி, மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிச்சி குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மேற்கு பகுதி கரையில் பலவித மரங்கள் நடப்பட்டு வளர்ந்துள்ளன.
இந்நிலையில், நேற்று குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை அடுத்து சிறிது தொலைவில், பூவரச மரங்கள் இரண்டு, வேரோடு சாய்ந்து கிடந்தன.
மண்ணின் ஸ்திரத்தன்மை குறைந்து, தானாக சாய்ந்தனவா அல்லது சமூக விரோதிகள் இச்செயலை செய்தனரா என்பது புதிராக உள்ளது.
குளத்தின் பராமரிப்பை, தங்கள் வசம் வைத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், உடனடியாக நடவடிக்கை எடுத்தால், மரங்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும்.
இதுபோல் மேலும் சில மரங்களும் சாயும் நிலையில் காணப்படுகின்றன. அதிகாரிகள் மனது வைக்க வேண்டும் என்பதே, மக்களின் எதிர்பார்ப்பாகும்.