Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பிரசவகால உயிரிழப்பு தமிழகத்தில் குறைப்பு

பிரசவகால உயிரிழப்பு தமிழகத்தில் குறைப்பு

பிரசவகால உயிரிழப்பு தமிழகத்தில் குறைப்பு

பிரசவகால உயிரிழப்பு தமிழகத்தில் குறைப்பு

ADDED : ஜூலை 30, 2024 03:37 AM


Google News
மகப்பேறு இறப்பு விகிதத்தை பொறுத்தவரை, ஒரு லட்சம் பிரசவங்களில், 70 மரணங்கள் என்ற சர்வதேச இலக்கை இந்தியா எட்டியிருக்கிறது. இந்த இலக்கை தமிழகம் ஏற்கனவே எட்டியிருப்பதோடு, குறைந்த அளவிலான இறப்புகள் என்ற வகையில் சாதனையும் படைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்தாண்டு, ஒரு லட்சம் பிரசவங்களில், 54 ஆக இருந்த இறப்பு, இந்தாண்டு, 45.5 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், மகப்பேறு இறப்பு, பூஜ்ஜியமாக உள்ளது. அவற்றை பின்பற்றி, மற்ற மாவட்டங்களும் இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு, 8.70 லட்சம் என, 99.9 சதவீத பிரசவங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதில், அரசு மருத்துவமனைகளில், 59 சதவீதம் நடைபெறுகிறது. இதற்காக, மத்திய அரசின் பல்வேறு விருதுகளை நாம் பெற்றிருக்கிறோம்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல, நீதிபதிகள் விருப்பப்பட்டால், அவர்களுக்கு முழு உடற்பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

- சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us